சிறுநீரகத்தில் உள்ள கனிமங்கள் மற்றும் அமில உப்புகளால் ஆன கடினமான பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சிறிய கற்களாக உருவாகும். இவற்றை சில அறிகுறிகளால் கண்டறிய முடியும்.
* சிறுநீரகக் கற்கள் இருந்தால், முதுகில், அடிவயிற்றில், பக்கவாட்டில் வலி ஏற்படும்
* சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படும்
* சிலருக்கு சிறுநீரில் ரத்தம் வர தொடங்கும்
*சிறுநீர் கழிக்கமுடியாத சூழல் உருவாகலாம்
* சிலர் அதிக அளவு சிறுநீர் கழிப்பார்கள்
* சிறுநீரில் துர்நாற்றம், நுரை போன்ற வரலாம்