பிரிட்டனில் பிப்ரவரி 29ஆம் நாள் பெண்கள் தங்கள் காதலனிடம் காதலைச் சொல்ல ஏற்ற நாள் என்று நம்பப்படுகிறது. காதலை ஆண்கள் தான் முதலில் சொல்ல வேண்டும் என்ற கருத்து காலாவதியாகும் வகையில் இந்த வழக்கம் இருக்கிறது. பல பெண்கள் பிப்ரவரி 29ஆம் தேதி தங்கள் பிரியத்திற்குரிய நபரிடம் காதலை வெளிப்படுத்துகிறார்கள். அயர்லாந்தில் லீப் ஆண்டின் பிப்ரவரி 29ஆம் தேதி பேச்சுலர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. பிப்ரவரி 29ஆம் தேதி காதலை மறுத்தால் அந்தப் பெண்ணின் ஏமாற்றத்தை ஈடுசெய்ய ஏதாவது ஒரு பரிசு வழங்க வேண்டும்.