வங்கதேசத்தில் மாண்டி என்ற பழங்குடியினரில் உள்ள பெண்ணின் கணவர் இறந்துவிட்டால் அதே இனத்தைச் சேர்ந்த மற்றொருவர் அப்பெண்ணை மறுமணம் செய்வார். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் இருந்தால், அந்த குழந்தை வளர்ந்து பருவம் எய்தியதும் அந்தப் பெண்ணையும் தந்தை ஸ்தானத்தில் இருக்கும் அதே நபரே திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் உள்ளது. மரபு வழி தந்தை மற்றும் மரபு வழி மகள் இடையே திருமணம் நடைபெறுவதில்லை என்பதால் இந்த திருமணங்களை மாண்டி இனம் ஏற்கிறது.