பாகிஸ்தானைச் சேர்ந்த அன்வரூல் ஹக் என்பவர் அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியேறி குடியுரிமை பெற்று 28 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரது மகள் ஹீரா (15), டிக்டாக்-ல் அதிக நேரம் செலவு செய்து, வீடியோக்கள் வெளியிட்டு வந்துள்ளார். இதனை அவரது தந்தை கண்டித்து வந்துள்ளார். இருந்தபோதிலும், வீடியோ வெளியிடுவதை சிறுமி நிறுத்தவில்லை. இந்நிலையில், ஹீராவை தனது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு அழைத்துச் சென்று, வீட்டில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார்.