மத்திய அரசானது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, எம்.சி.ஜி.எஸ். என்ற புதிய கடன் உத்தரவாத திட்டத்தை அறிவித்துள்ளது. தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தால், இந்த திட்டத்தில் சிறு தொழில் நிறுவனங்களின் கடன்களுக்கு 60விழுக்காடு வரை உத்தரவாதம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடனை பெற 'உத்யம்' இணையதளத்தில் சிறு தொழில் நிறுவனமாக பதிவெண் பெற்றிருப்பது அவசியம். மேலும், இந்த திட்டத்தின் மூலம் ரூ.7 லட்சம் வரை அடமானம் இன்றி கடன் கிடைக்கும் எனப்படுகிறது.