பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற பஞ்சாப் விவசாயிகள் அரியானா எல்லைப் பகுதியில் தடுக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் விவசாயிகள் போராட்டத்தை தொடரலாம் என்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்த பஞ்சாப் அரசின் கோரிக்கையையும் ஏற்றது.