ரசிகர் மறைவு.. நேரில் சென்ற நடிகர் சூர்யா

61பார்த்தது
1997ஆம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூர்யா. தற்போது நாடு முழுவதும் இவருக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவருக்கு சூர்யா நற்பணி மன்றங்கள் ஆரம்பித்து இவரை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சூர்யாவின் தீவிர ரசிகருமான விழுப்புரம் மாவட்டத்தின் சூர்யா நற்பணி இயக்கத்தின் தலைவருமான மணிகண்டன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இந்த தகவலறிந்த அவர் நேரில் சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.