கடந்த சில காலமாகவே பிரபல யூடியூபர்கள் இர்ஃபான் மற்றும் பிரியாணி மேனுக்கும் இடையே பிரச்னை ஓடிக்கொண்டிருந்த நிலையில், திடீரென நேற்று பிரியாணி மேன் யூட்யூப் லைவில் தற்கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இந்தச் சூழலில் அதனை அவரது தாய் தடுத்த வீடியோ வெளியாகியிருக்கிறது. இர்ஃபான் மீது தேவையில்லாத குற்றசாட்டுகள் மேலும் அவர் குறித்து அவதூறு கருத்துக்களை தொடர்ந்து பேசிவருவதாக சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.