பிரபல தமிழ் திரைப்பட நடிகை வீட்டில் பணிப்பெண் கைவரிசை

51பார்த்தது
பிரபல தமிழ் திரைப்பட நடிகை வீட்டில் பணிப்பெண் கைவரிசை
நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அதுல்யா ரவி கோவையில் உள்ள தனது வீட்டில் தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். அதுல்யா வீட்டில் சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ.2000 பணம் திருடு போனது. இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் அதுல்யா வீட்டு பணிப்பெண்ணான செல்வி (46) மற்றும் சுபாஷினி (40) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதோடு பாஸ்போர்ட் குறித்து விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி