3வது திருமணம் செய்த பிரபல நடிகை

69பார்த்தது
3வது திருமணம் செய்த பிரபல நடிகை
’லெசன்ஸ்’, ‘சைலென்ஸர்’ உள்ளிட்டப் பல மலையாளப் படங்களில் நடித்தவர் நடிகை மீரா வாசுதேவன். தமிழிலும் ‘ஜெர்ரி’, ‘அடங்க மறு’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பாலக்காட்டை சேர்ந்த ஒளிப்பதிவாளரான விபினை கடந்த 21ஆம் தேதி மீரா வாசுதேவன் திருமணம் செய்துள்ளார். இந்த செய்தியை அவர் நேற்று தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருவரும் இணைந்து குடும்பவிளக்கு சீரியலில் இணைந்து பணியாற்றியபோது நட்பாக பழகி காதலித்துள்ளனர். முன்னதாக மீரா வாசுதேவன், விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அதன் பின்பு ‘சார்பட்டா’ புகழ் நடிகர் ஜான் கொக்கேனுடனும் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி