சரோஜ் கோயங்கா மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

66பார்த்தது
சரோஜ் கோயங்கா மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்
எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் மறைந்த ராம்நாத் கோயங்காவின் மருமகள் சரோஜ் கோயங்கா (94), சென்னையில் நேற்று (மே 24) காலமானார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “இதழியல், தொழில்துறையில் சாதனை படைத்தவர் என்பது மட்டுமின்றி, சிறந்த மனிதநேயராக இருந்து கொடைத்தன்மை மிக்கவராகவும் விளங்கியவர் சரோஜ் கோயங்கா. அன்னாரை இழந்து வாடும் அவரது மகள்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி