கடும் வெப்பம், குறைவான மழை; அன்னாசி விலை கிடுகிடு

76பார்த்தது
கடும் வெப்பம், குறைவான மழை; அன்னாசி விலை கிடுகிடு
அன்னாசிப்பழம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மொத்த சந்தையில் அன்னாசிப்பழம் ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.65 வரை விற்பனையாகிறது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வட இந்திய மாநிலங்களில் கோடை வெயில் வாட்டியெடுக்கிறது. ஆனால், அன்னாசிப்பழத்தின் அதிக தேவை காரணமாக உற்பத்தி குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டது.

கேரளாவின் மலையோர மாவட்டங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அன்னாசிப்பழங்கள், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுககும், வட இந்திய மாநிலங்களுக்கும் ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக அனுப்பப்பட்டுள்ளன. இதனால் விலை வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது. சீதோஷ்ண நிலை சீரடையாத பட்சத்தில் அடுத்த ஆண்டு விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி