எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் 9.56 பில்லியன் டாலர் எலக்ரானிக்ஸ் பொருட்களை பொருட்களை ஏற்றுமதி செய்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 32.84% ஆகும். மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.19 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொறியியல் சரக்குகளையும் தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளது.