பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான கன்டெய்னர் காட்டேஜ்களில் சோதனை

67பார்த்தது
பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான கன்டெய்னர் காட்டேஜ்களில் சோதனை
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலின் தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உள்ள கன்டெய்னர் காட்டேஜ்களில் இன்று மே (18) போலீசார் சோதனை நடத்தினர். யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்த நிலையில், அதனை வெளியிட்ட பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லி வைத்து போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

இந்த நிலையில், பெலிக்ஸ்-க்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர், அந்தவகையில் மன்னார்குடி அருகே கோட்டசேரி கிராமத்தில் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் தற்காலிக கண்டெய்னர் வீட்டில் பெலிக்ஸ் ஆவணங்கள் ஏதும் வைத்துள்ளாரா? என சோதனை நடத்தப்பட்டது. எந்த ஆவணங்களும் கிடைக்காமல் போலீசார் திரும்பி சென்றனர்.

தொடர்புடைய செய்தி