இன்றும் சரமாரியாக குறைந்த தங்கம் விலை!

51பார்த்தது
இன்றும் சரமாரியாக குறைந்த தங்கம் விலை!
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்கவரி குறைந்ததை தொடர்ந்து தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இன்றைய (ஜூலை 24) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.51,920-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.6,875-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,945-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.55,560-ஆக விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி