புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள தேசிபாளையம் ஊராட்சி பகுதியில் புங்கம்பள்ளி குளம் உள்ளது. நேற்று ஒரு லாரியில் இருந்த கழிவுகளை சிலர் புங்கம்பள்ளி குளத்தில் 3 கொட்ட முயன்றனர். இதைப்பார்த்த - அந்தப்பகுதி மக்கள் 7 உடனே லாரியை சிறைபிடித்தனர். பின்னர் இதுகுறித்து தேசிபாளையம் 5 ஊராட்சி நிர்வாகத் துக்கும், புஞ்சைபுளி யம்பட்டி போலீசா ருக்கும் தகவல் - கொடுத்தனர். அதன் பேரில் போலீசாரும், தேசி பாளையம் ஊராட்சி தலைவர் முரளிகுமாரும் அங்கு வந்தனர். அப்போது போலீசார் நடத்திய விசாரணை யில் லாரி கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்தது என்று தெரியவந்தது. இதையடுத்து லாரி உரிமையாளருக்கு ஊராட்சி சார்பில் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.