சத்தி - அத்தானி ரோட்டில் விபத்தை தடுக்க ஸ்பீடு பிரேக்

66பார்த்தது
சத்தி - அத்தானி ரோட்டில் விபத்தை தடுக்க ஸ்பீடு பிரேக்
ஈரோடு மாவட்டம், கோபி கோட்டம், சத்தி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட முக்கிய மாநில நெடுஞ்சாலையான சத்தி - அத்தாணி - பவானி ரோட்டில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

வாகன போக்குவரத்து நிறைந்த இந்த ரோட்டில் சத்தியில் இருந்து 10 வது கி. மீல் ஏளுர் மேடு என்ற இடத்தில் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் அறிவுறுத்திய படி, விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு நிதியுதவி கொண்டு அந்த பகுதியில் ஜீப்ரா கோடு, ஸ்பீடு பிரேக் அமைக்கப்பட்டு தற்பொழுது மக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி