ஊத்துக்குளியில் குடிநீர் குழாய் பழுது: தனியார் உடைமை சேதம்.

576பார்த்தது
ஊத்துக்குளியில் குடிநீர் குழாய் பழுது: தனியார் உடைமை சேதம்.
ஊத்துக்குளி பேரூராட்சி பகுதியில் இருந்து மொரட்டுபாளையம், கவுண்டம்பாளையம், அ. பெரியபாளையம், எஸ். பெரியபாளையம் உட்பட பல்வேறு ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஊத்துக்குளி- திருப்பூர் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் குழாய் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதனை சரி செய்ய குடிநீர் வடிகால் வாரிய துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், பழுதடைந்துள்ள பகுதிகளில் பழுது நீக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இந்த பணியில் ஈடுபடும் ஜேசிபி ஓட்டுநர் தனது பணியில் கவனக் குறைவாக செயல்பட்டதால் அருகாமையில் இருந்த தனியார் நில உடைமை பொருட்கள் சேதம் அடைந்தது. இது குறித்து தனியார் நில உரிமையாளர்கள் கேட்டபோது, மெத்தனமாகவும் , மரியாதை குறைவாகவும், பதில் அளித்துள்ளார்.

மேலும் நகர்புற பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளும் போது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு போக்குவரத்திற்கும், மற்றவர்களுக்கும் இடையூறின்றி தாங்கள் மேற்கொள்ளும் பணிகளை கவனமாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும், இப்பகுதி பொதுமக்களும் தெரிவித்துள்ளனர். பழுதடைந்த பகுதிகளை மீண்டும் சரி செய்து கொடுத்து விடுகிறோம் என ஒப்பந்த பணியாளர்கள் உறுதி கூறியதன் அடிப்படையில் நில உரிமையாளர்கள் கலைந்து சென்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி