சென்னிமலை, ஊத்துக்குளி ரோடு, காந்திநகர் பகுதியில் விவசாயி ஒருவர் தோட்டத்தில் நேற்று காய்ந்து கிடந்த புல் மற்றும் மரக்கழிவுகளில் நேற்று திடீரென தீப்பிடித்தது. மேலும் அருகில் உள்ள 3 தென்னை மரங்களிலும் தீ பரவியது. பின்னர் இது குறித்து சென்னிமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் ½ ஏக்கர் பரப்பிலான காய்ந்த புல் செடிகள் மற்றும் மரக்ழிவுகள் தீயில் எரிந்து சாம்பல் ஆனது.
அந்த வழியே சென்றவர்கள் யாரோ புகை பிடித்து விட்டு அணைக்காமல் போனதால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.