2020-ம் ஆண்டு பட்ஜெட்டில் புதிய வரிவிதிப்பு முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதில் குறைந்த வரி விகிதங்கள், வரி விலக்குகள், சலுகைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. எனவே 72% மக்கள் புதிய வரி விதிப்பின் கீழ் வருமான வரித்தாக்கல் செய்து வருகின்றனர். எனவே பழைய வரி முறையை முற்றிலும் ஒழித்துவிட்டு, புதிய வரி முறையை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 2025 பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.