ஈரோடு இடைத்தேர்தல் – ரூ.2 லட்சம் பறிமுதல்

53பார்த்தது
ஈரோடு இடைத்தேர்தல் – ரூ.2 லட்சம் பறிமுதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று காலை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரில் சோதனையிட்ட போது ஓட்டுநரிடம் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி