தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய் குடும்ப தலைவிகளுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் திட்டத்துக்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு? என்பதை தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு தமிழக அரசு தகவல் தெரிவிக்கவில்லை. மேலும், புதிதாக எத்தனை பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் தரப்படவில்லை.