அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த அரசு சார்பில் 14.6 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்ட நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி மாதத்தில் ஆண்டு விழாக்கள் நடத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.