பெருந்துறை அருகே உள்ள பெரியமடத்துபாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (52). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று முன் தினம் வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம்பக் கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு தெய்வசிகாமணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் நடத்திய விசாரணையில், தெய்வசிகாமணி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.