ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓட்டளிக்க, வாகன வசதி செய்வது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று (ஜனவரி 23) நடந்தது. பயிற்சி உதவி கலெக்டர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் வாகன வசதி தேவைப்பட்டால், தேர்தல் ஆணையத்தின் SAKSHAM APP/1950 உதவி எண்/கட்டுப்பாட்டு அறை மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.