ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.

84பார்த்தது
ஊரக வேலை உறுதித்திட்டத்தில் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.
ஊத்துக்குளி யூனியன் ஆபீஸ் முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊத்துக்குளி யூனியனுக்குட்பட்ட 37 ஊராட்சிகளிலும், கடந்த மூன்று மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கப்பட்டவில்லை. ஆகவே வேலை அட்டை வைத்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்க கோரியும், கடந்த மூன்று மாதமாக வேலையில்லா காலத்திற்கு சட்டப்படியான இழப்பீடு தொகை வழங்க கோரியும், சட்டக்கூலி ரூ. 319-ஐ முழுமையாக வழங்க கோரியும், இந்த திட்டத்தில் வேலைக்கான நிர்வாக அனுமதியை  மாவட்ட நிர்வாகம் காலதாமம் செய்யக்கூடாது என வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் பேரூராட்சி தலைவர் குமார், தாலுக்கா செயலாளர் கொளந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி உட்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு  தொழிலாளர்களின் தற்போதைய நிலை குறித்து உரிய நடவடிக்கை வேண்டுமென பேசினார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள்  தனித்தனியான கோரிக்கை மனுக்களை ஊத்துக்குளி வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணி (கி. ஊ) அவர்களிடம் கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி