4 இடங்களில் தெரு நாய்கள் ஆடுகளை கடித்ததால் 3 ஆடுகள் இறந்தது

77பார்த்தது
சென்னிமலை அருகே ஒரே நாளில் 4 இடங்களில் தெரு நாய்கள் பட்டியில் புகுந்து ஆடுகளை கடித்ததால் 3 ஆடுகள் இறந்தது. பட்டிக்குள் புகுந்து ஆடுகளை துரத்தி, துரத்தி தெரு நாய்கள் கடிக்க முயலும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னிமலை வட்டாரத்தில் ஆட்டு பட்டியில் தெரு நாய்கள் புகுந்து ஆடுகளை கடித்து கொன்று வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று சென்னிமலை அருகே கூத்தம்பாளையம் ஊராட்சி ஆலாம்பாளையத்தில் உள்ள விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவரின் ஆட்டுப்பட்டியில் தெரு நாய்கள் புகுந்து ஆடுகளை கடித்ததில் 2 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளது.
அதேபோல் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் ஆட்டு பட்டிக்குள் தெரு நாய்கள் புகுந்து கடித்ததில் 2 ஆடுகள் இறந்துவிட்டது. 10 ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளது.
மேலும் கோவிந்தசாமி என்பவரின் ஆட்டுக்குட்டியையும், மூர்த்தி என்பவரின் கோழியையும் தெரு நாய்கள் கடித்து கொன்று விட்டது.
இது பற்றி தகவல் கிடைத்ததும் சிறுக்களஞ்சி கிராம நிர்வாக அலுவலர் இளவரசன் மற்றும் சென்னிமலை போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். புதுப்பாளையம் கால்நடை டாக்டர் விஜயகுமார் இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்தார். மேலும் உயிருக்கு போராடும் ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி