ஈரோடு அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிழரிந்த சம்பவத்தை கண்டித்து தாலுக்கா அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்ற விவசாய பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை முகாசிப்பிடாரியூர் ஊராட்சிக்குட்பட்ட ஓலப்பாளையம் பகுதியில் சென்னியப்பன் என்பவரது தோட்டத்தில் கட்டிவைத்திருந்த 28 ஆடுகளில் 18 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்த உள்ளன. மேலும் 10 ஆடுகளுக்கு உடலில் காயம் ஏற்பட்டு உள்ளன. இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து ஆடுகள் மர்மான முறையில் இறப்பது தொடர் கதையாகி உள்ளதை கண்டித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ஆடுகளுடன் பெருந்துறை தாலுக்கா அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்து உள்ளனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.