திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

2205பார்த்தது
ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கொடுமுடி அருகே உள்ள ஒத்தக்கடையில் வேனில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது,

கடந்த நாடளுமன்ற தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது போது இந்த முறை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அடுத்த இரண்டு நாட்கள் பாஜக அரசை ஓட ஓட விரட்டுவது குறித்து நீங்கள் பிரச்சாரம் செய்தால் திமுக நிச்சயமாக வெற்றி பெறும்.
உதயசூரியன் சின்னத்திற்காக வாக்களித்த மற்றும் வாக்களிக்க தவறி மக்களுக்கு பெருமை படும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் வேலை செய்து வருகிறார்.

மொடக்குறிச்சியில் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்க நடவடிக்கை. 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சோலார் புறநகர் பேருந்து நிலையம், சோலார் பகுதியில் விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கறிகள் சந்தை, பொல்லான் நினைவிடம் அமைக்க இடம் தேர்வு, அரச்சலூர் மலை கோவிலுக்கு செல்ல பாதை வசதி அமைக்க நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி