18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

69பார்த்தது
18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கேர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பினகுண்டா மற்றும் கரோனார் கிராமங்களுக்கு இடையே உள்ள ஹபடோலா வனப்பகுதியில் இன்று பிற்பகல் 2 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. முதற்கட்ட தகவலின் படி 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து மிகப்பெரிய ஆயுத களஞ்சியம் மீட்கப்பட்டது. தற்போது பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 3 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி