வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.18000

33476பார்த்தது
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.18000
ஓசூரில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பு துறை மாநில தலைவரும், பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், ஜிஎஸ்டி வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்வோம் என கூறியுள்ளார். மேலும், இளைஞர்களுக்கு நாட்டில் வேலை வாய்ப்பு இல்லை. ஏழை குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கும், அவர்களின் தாயாருக்கும் என மாதம் 17 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இது தவிர முதலமைச்சர் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் என மொத்தமாக ஒரு ஏழை குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு 18ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்றார்.

தொடர்புடைய செய்தி