சுகாதார செவிலியர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

58பார்த்தது
ஈரோட்டில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவி வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வித்யா, பொருளாளர் தவுலத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அச்சங்கத்தின் மாநில தலைவி இந்திரா பங்கேற்று கோரிக்கைகள் குறித்து பேசினார். கூட்டத்தில், சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் தற்போது பொதுசுகாதாரத்துறைக்கு மாற்றப்பட்டு கிராம செவிலியர்கள் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் முறையாக நிதி ஒதுக்காததால் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட முதல் குழந்தை பெற்ற பெண்களுக்கு நிதி உதவி வழங்கப்படாமல் உள்ளது. எனவே, இத்திட்டத்திற்கு உரிய நிதியை காலதாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், ஈரோடு மாவட்ட செயலாளராக புதிதாக ஈஸ்வரி தோ்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே மாவட்ட செயலாளராக இருந்த வித்யா, மாநில துணை செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதில், கிராம சுகதார செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி