18 வது மக்களவைக்கு தேர்தல் தேதி மார்ச் 16ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் விதி முறைகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து ஈரோட்டில் மாநகராட்சி பகுதியில் உள்ள தலைவர்களின் சிலை, அரசின் சார்பில் எழுதப்பட்டு இருந்த வாசங்கள் தலைவர்களின் பெயர்களை மறைத்தும், நகரின் பல்வேறு பகுதிகளில் சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் பிளக்ஸ் பேனர்கள் ஆகியவற்றை அகற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட நாட்டின் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. இதனை அடுத்து 6-ம் தேதி(நேற்று) மாலையுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள மறைத்து வைக்கப்பட்டிருந்த கட்சி தலைவர் சிலைகளில் திரைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் சிலைகளில் திரை அகற்றப்பட்டு தூய்மை செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நடத்தை விதி முறையால் மூடப்பட்ட சிலை, கல்வெட்டுகள் மற்றும் அரசின் சார்பில் எழுதப்பட்ட வாசகங்கள் திறக்கும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.