ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் விவரம்

8246பார்த்தது
ஈரோடு மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் விவரம்
மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். ஈரோடு மக்களவை தொகுதி - அதிமுக வேட்பாளர் விபரம்:

பெயர் - ஆற்றல் அசோக்குமார்
வயது -54 (1970)
முகவரி - புதுப்பாளையம், கொடுமுடி வட்டம், ஈரோடு.
கல்வித்தகுதி - முதுநிலை மின் மற்றும் கணினி பொறியியல், முதுநிலை வணிக நிர்வாகம்.
கட்சிப் பொறுப்பு - அதிமுக ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர்

தொழில் - ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவர், தி இந்தியன் பப்ளிக் பள்ளி குழுமம், குளோப்எடுகேட் குரூப் ஆப் ஸ்கூல்ஸ், டிப்ஸ் பள்ளி, டிப்ஸ் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனக்களில் தலைவராக உள்ளார். ஆற்றல் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனம் மூலம், ஈரோடு மக்களவைத் தொகுதியில், மலிவு விலை உணவகம், மருந்தகம், கிராமப்புற பள்ளிகள் மற்றும் கோயில்களைச் சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

குடும்பம் -ஆற்றல் அசோக்குமாருக்கு கருணாம்பிகா என்ற மனைவியும், அஸ்வின்குமார் மற்றும் நிதின்குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது தந்தை ஆர். ஆறுமுகம். தாய் சவுந்தரம் முன்னாள் எம்பி ஆவார். இவரது மனைவியின் தாய் (மாமியார்) சிகே சரஸ்வதி மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம். எல். ஏ. வாக தற்போது பதவி வகித்து வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி