விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் மகன்

67பார்த்தது
விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் மகன்
மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் விருப்ப மனு பெற்றுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. இதனை இன்று காலை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்தார். தேமுதிகவிற்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனும், கள்ளக்குறிச்சி தொகுதியில் எல்.கே.சுதீஷூம் விருப்ப மனு பெற்றுள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி