சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் 219 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அவர் பிறந்த இடமான ஈரோடு அரசரசலூர் அருகே உள்ள ஜெயராமபுரத்தில் பொல்லானின் திருவுருவப்படத்திற்கு தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சு. முத்துசாமி , ஜெயராம புரத்தில் சுதந்திர போராட்ட வீரர் பொல்லானிற்கு 83 சென்ட்டில் ஒரு கோடி 82 லட்ச ரூபாய் செலவில் விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என்றும் , ஒதுக்கப்படும் ஒரு கோடி 82 லட்ச ரூபாய் முன் தொகை என்றும் தேவைப்பட்டால் மீண்டும் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மணிமண்டபத்துடன் நூலகம் மற்றும் சமுதாய கூடங்களும் சேர்த்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படும் என்றார்.
தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர் பொல்லானிற்கு அதிமுக , தமிழ்மாநில காங்கிரஸ் , காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்