கோபி அருகே உள்ள கருங்காடு தடப்பள்ளி வாய்க்காலில் நேற்று(செப்.21) ஒரு பெண் பிணம் இருந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 65 வயது இருக்கும். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? வாய்க்காலில் தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று கோபி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.