கவுந்தப்பாடி அருகேபழனி கோவிலுக்கு கரும்பு சர்க்கரை கொள்முதல்

64பார்த்தது
கவுந்தப்பாடி அருகேபழனி கோவிலுக்கு கரும்பு சர்க்கரை கொள்முதல்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்  கூடத்தில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனிக்கு 13. 07. 2024 சனிக்கிழமை அன்று நண்பகல் 1. 00 மணிக்கு கரும்புச் சர்க்கரை கொள்முதல் செய்ய உள்ளதால் விவசாயிகள் கரும்புச் சர்க்கரையை 13. 07. 2024 முற்பகல் 11. 00 மணிக்குள் கவுந்தப்பாடி விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
(குறிப்பு மூட்டைகள் சணல் நாரால் தைத்து, கல், ஈரப்பதம், சர்க்கரை கட்டி, கலப்படம் ஏதும் இல்லாமல் சுத்தமான மற்றும் தரமான கருப்புச்சர்க்கரையை மட்டும் எடுத்து வருமாறு ஈரோடு விற்பனைகுழுவின் செயலாளர் அவர்களால் கேட்டு கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு 9944523556 விற்பனை கூட கண்காணிப்பாளர், கவுந்தப்பாடி.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி