பீகாரில் சிகரெட் கொடுக்க மறுத்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். லக்கிசராய் மாவட்டத்தில் சிகரெட் கொடுக்க மறுத்த 65 வயது மூதாட்டியை 4 பேர் கும்பல் நேற்று முன்தினம் இரவு (ஜன., 23) பலாத்காரம் செய்துள்ளனர். இரவு வேளையில் அருகிலுள்ள வயல்வெளிக்கு இழுத்துச் சென்று, கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற இருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும்
போலீசார் தெரிவித்துள்ளனர். மூதாட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.