ஹரியானா மாநிலத்தில் குழந்தையை தூக்கிக்கொண்டு சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர், திடீரென சாக்கடையில் விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சாலையில் இருக்கும் சாக்கடையை கவனிக்காமல், கையில் குழந்தையுடன் செல்போனில் பேசியபடி பெண் சென்றுள்ளார். அப்போது, அவர் குழந்தையுடன் சாக்கடையில் விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். தொடர்ந்து, திறந்துகிடக்கும் சாக்கடையை சரிசெய்ய அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.