சென்னை கிண்டியில் ஐடி நிறுவனம் நடத்தி வருபவர் சக்திவேல். முன்னாள் நாதக நிர்வாகியான இவர், தனது நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். 4 பெண்கள் புகார் அளித்த நிலையில், வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். 25 நாட்களில் சக்திவேலுக்கு 2 வழக்குகளில் ஜாமீன் கிடைத்துள்ளது. மீதமுள்ள ஒரு வழக்கிலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கினால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.