கோயம்புத்தூர்: ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் (36) என்பவர் சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்த அவர், தனது நண்பர்களுக்கு செல்போனில் தொடர்புகொண்டு, தனக்கு திருமணம் நடக்காமல் இருக்கும் விரக்தியில் விஷம் குடித்ததாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு பதறிப்போன பிரகாஷின் நண்பர்கள் வீட்டிற்குச் சென்று அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.