உள்ளூர் பகையின் காரணமாகவே வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. முட்டுக்காடு பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கத்தில் முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது. மேலும், குற்றச்செயலில் ஈடுபட்ட மூவருக்கு எதிராக புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.