பெண்ணை தாக்கி கொன்ற புலி.. தேடுதல் வேட்டை தீவிரம்

60பார்த்தது
பெண்ணை தாக்கி கொன்ற புலி.. தேடுதல் வேட்டை தீவிரம்
கேரளாவின் வயநாடு மாவட்டம் மானந்தவாடி பஞ்சரக்கொல்லியில் நேற்று (ஜன., 24) பெண்ணை தாக்கி கொன்ற புலியை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆர்ஆர்டி குழுக்கள் வனப்பகுதியில் தெர்மல் ட்ரோன்களைப் பயன்படுத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, உயிரிழந்த ராதா என்ற பெண்ணின் உடல் இன்று (ஜன., 25) தகனம் செய்யப்படுகிறது. மானந்தவாடியை அடுத்து, வைத்திரி பகுதியிலும் புலி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி