கொலை வழக்கில் கைதானவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்

81பார்த்தது
கொலை வழக்கில் கைதானவர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்
ஈரோடு அருகே திண்டல் அடுத்த காரப்பாறை, புதுகாலணியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (28). ஏ. சி. மெக்கானிக். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி நண்பர்களான திண்டல் தெற்கு பள்ளத்தை சேர்ந்த தமிழரசு (28), பாலமுருகன் (29) ஆகியோருடன் மது அருந்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாய் தகராறில், பாலமுருகனை தமிழரசு தாக்கியுள்ளார். 

பாலமுருகன் புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் தமிழரசு மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதரை கத்தியால் குத்தி தமிழரசு கொலை செய்தார். இது தொடர்பாக தமிழரசை கைது செய்த போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தமிழரசு மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் தமிழரசை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரை ஏற்கப்பட்டதால் தமிழரசு மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகலை ஈரோடு தாலுகா போலீசார் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி