தூய்மை பணியாளர்களுக்கு நிதி உதவி

62பார்த்தது
தூய்மை பணியாளர்களுக்கு நிதி உதவி
தூய்மை பணியாளர்களுக்கு நிதி உதவி

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தாட்கோ மூலமாக
தற்காலிக தூய்மை பணியாளரின் வாரிசுதாரருக்கு இறப்பு மற்றும் ஈமச்சடங்கு நிதிஉதவியாக ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையும், 2 தூய்மை பணியாளர்களுக்கு மகப்பேறு நிதிஉதவியாக தலாரூ. 6 ஆயிரத்துக்கான காசோலைகளையும் மாவட்ட கலெக்டர்ராஜகோபால் சுன்கரா வழங்கினார். பெருந்துறையில் உள்ள ஈரோடுமாவட்ட அரசு மாதிரி பள்ளிக்கூடத்தில் (எலைட்) தமிழ் வழியில்
படித்து நீட் தேர்வில் தமிழகத்தில் எலைட் பள்ளிக்கூட அளவில்
முதலிடம் பிடித்த மாணவர் எஸ். உதயகுமாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் உதவி கலெக்டர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பிரேமலதா, சமூக பாது காப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் ராஜகோபால், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அதிகாரி தர்மராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி