ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு தேர்வு

75பார்த்தது
ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று (ஜுன் 11) விஜயவாடாவில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடுவின் பெயரை நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் முன்மொழிந்தார். நடந்து முடிந்த அம்மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களைப் பிடித்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றது. கூட்டணிக் கட்சிகளான ஜனசேனா 21, பாஜக 8 தொகுதிகள் மொத்தம் 164 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் ஆட்சியமைக்க சந்திரபாபு நாயுடு அம்மாநில ஆளுநரிடம் உரிமை கோரினார்.

தொடர்புடைய செய்தி