போக்குவரத்து துறையின் தொடர் அதிரடி நடவடிக்கைகள்

51பார்த்தது
போக்குவரத்து துறையின் தொடர் அதிரடி நடவடிக்கைகள்
இந்தியாவில் போக்குவரத்து துறை சார்பில் அண்மை காலமாக பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிவேகமாக வாகனம் ஓட்டினால் 1,000 முதல் 2,000 ரூபாய் வரை அபராதம். ஒரு மைனர் வாகனம் ஓட்டி பிடிபட்டால், அவருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு வாகன உரிமையாளரின் பதிவு அட்டை ரத்து செய்யப்படும், மேலும் அந்த குறிப்பிட்ட நபர் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற தகுதியற்றவராக ஆவார். தமிழ்நாட்டில் 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள், பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தினைப் புதுப்பிக்கவோ இயலும் என விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி