ஈரோடு ராஜகணபதி கோயிலில் நாளை மறுநாள் (15ம் தேதி) மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது.
ஈரோடு இடையன்காட்டு வலசில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், ஞானப் பிரசன்னாம்பிகா, உடனமர், காளஹஸ்தீஸ்வரர், வேம்பரசு செல்வவிநாயகர் ஆகிய சன்னதி உள்ளது.
இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (15ம் தேதி) நடக்கிறது.
இதனையொட்டி, நாளை (14ம் தேதி), விக்னேஷ்வர பூஜை, பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்திரம், மாலா மந்திர ஹோமம், திரவியாஹிதி, வேதபாராயணம், திருமுறை விண்ணப்பம், ஐந்தாம் கால யாக வேள்வி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான நாளை மறுநாள் (15ம் தேதி), மங்கள இசை, கணபதி அதர்வஷிரிஷ உபநிஷத், கணபதி மூலமந்திர ஹோமம், நாடி சந்தானம், யாத்ராதானம் நடக்கிறது.
பின்னர், காலை 8: 30 மணிக்கு, ராஜகணபதி, ஞானப் பிரசன்னாம்பிகா, உடனமர், காளஹஸ்தீஸ்வரருக்கு, மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. தொடர்ந்து, சுவாமி அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவ வைபவாங்கம் நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ராஜகணபதி கோயில் கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொள்கின்றனர்.