ஈரோடு மாநகர காங்கிரஸ் கட்சி கூட்டம்

62பார்த்தது
ஈரோடு மாநகர காங்கிரஸ் கட்சி கூட்டம்
ஈரோடு மாநகர காங்கிரஸ் கட்சி கூட்டம்

ஈரோடு மூலபட்டறையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர மாவட்ட காங்கிரஸ் அவசர கூட்டம் பொறுப்பாளர் திருச்செல்வம் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன், மண்டல தலைவர்கள் ஜாபர் சாதிக், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளை வெற்றியீட்டு தந்த தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், தமிஞகாங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மத்திய அமைச்சர் ஈ. வி‌. கே. எஸ். இளங்கோவன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், இளம் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும், காங்கிரஸ் பாராளுமன்ற குழு தலைவராகவும் பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி